காற்று வீசுதே

 

காற்று வீசுதே காற்று வீசுதே

கீழ்  காற்று எங்கும் வீசுதே

தடைகள் விலகுதே சபைகள் வளருதே

அபிஷேகத்தின் காற்றினால்

 

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா ஆமென்  (4)                                   -      காற்று வீசுதே

 

காற்றை அனுப்புனீர் காடைகள் வந்ததே

பாளையம் நிரம்ப செய்தீர்  (2)

அனுப்பும் தேவா அபிஷேக காற்றை இன்று

சபைகள் நிரம்பி வளர (2)     (அல்லேலூயா)

 

 

பலத்த காற்று மேல்வீட்டை நிரப்பிற்றே

ஆதி சபை பெலன் கொண்டது (2)

ஆத்துமாக்களை அனுதினம் சேர்த்தீர்

இன்றும் சேரும் எங்கள் சபையிலே (2) (அல்லேலூயா)

 

காற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும்

கோதுமை மணிகள் தங்கட்டும்

நேசத்தின் காற்று அனுதினம் வீசட்டும்

ஒருமனம் ஒற்றுமை வளரட்டும் (2) (அல்லேலூயா)